அடிக்கின்ற வெயிலுக்கு ஏதாவது குளுகுளுவென்று சாப்பிட வேண்டும் என்றால் பலரும் நாடுவது கடைகளில் விற்கப்படும் பானங்களோ அல்லது ஐஸ்கிரீமா தான். ஒரு சிலர் பழச்சாறுகளை சில்லென்று சாப்பிட விரும்புவார்கள். ஒருமுறை இந்த இளநீர் பாயாசம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அதன் பிறகு இதன் சுவைக்கு நீங்கள் அடிமையாகி விடுவீர்கள்.
வாவ்…! குழந்தைகளுக்கு செய்து கொடுக்க சூப்பரான ஸ்நாக்ஸ் ரவை அப்பம்…!
இளநீர் பொதுவாகவே அனைவருக்கும் மிகப் பிடித்தமான பானம் அதுவும் வெயில் காலத்தில் சொல்லவா வேண்டும். எங்கு இளநீரை பார்த்தாலும் உடனே ஓடி சென்று வாங்கி அருந்தும் நபர் என்றால் உங்களுக்கு நிச்சயம் இந்த இளநீர் பாயாசம் மிகவும் பிடிக்கும். வாருங்கள் இந்த இளநீர் பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இளநீர் பாயாசம் செய்வதற்கு முதலில் 50 கிராம் அளவு முந்திரிப் பருப்பை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரி நன்கு ஊறிய பிறகு சிறிதளவு தண்ணீர் விட்டு இந்த முந்திரியை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று இளநீரை உடைத்து அதில் உள்ள வழுக்கை மற்றும் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு லிட்டர் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். பாலை அடுப்பில் வைத்து நன்கு காய்ச்சவும். பால் காய்ந்ததும் அதில் நாம் ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் முந்திரியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை பாலில் ஊற்றி வேண்டும். இப்பொழுது முந்திரி சேர்த்த பாலை நன்றாக கொதிக்க விட வேண்டும்.
நான்கு ஸ்பூன் அளவு கஸ்டர்ட் பவுடர் எடுத்து அதை கொஞ்சமாக தண்ணீரில் கட்டி படாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். இதை அடுப்பில் வைத்து கட்டிகள் ஏற்படாத வண்ணம் காய்ச்ச வேண்டும். கஸ்டர்ட் பவுடரை காய்ச்சிய பிறகு சிறிது நேரம் ஆற வைக்க வேண்டும்.
இப்பொழுது ஆறிய கஸ்டர்ட் கரைசலை முந்திரி பாலுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு 200 கிராம் அளவு மில்க் மெய்டையும் இந்த பாலுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இதனை இப்பொழுது கொதிக்க விட வேண்டும். அடுப்பு மிதமான தீயில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
அனைத்தும் சேர்ந்து நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடலாம். இப்பொழுது இதில் 250 கிராம் சீனி சேர்த்து கலக்கி விட வேண்டும். சிறிதளவு குங்குமப்பூ தூவிக் கொள்ளலாம். இந்தப் பாலை நன்கு ஆறவிடவும்.
இந்த சித்திரை 1 அன்று சுவையான இந்த செட்டிநாட்டு ஸ்பெஷல் உக்கரா செய்து அசத்துங்கள்…!
பால் நன்றாக ஆறிய பிறகு நாம் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் இளநீரை இதில் சேர்த்து கலந்த விடவும். இளநீரில் இருந்து எடுத்த வழுக்கையை பொடிப்பொடியாக நறுக்கி இதில் சேர்க்க வேண்டும். இப்பொழுது இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது நேரம் கழித்து பரிமாறலாம். அவ்வளவுதான் அட்டகாசமான குளு குளு இளநீர் பாயாசம் தயார்.