ஸ்மார்ட் போன் உங்களை முழுமையாக ஆக்கிரமித்து விட்டதா? மொபைலுக்கு நீங்கள் அடிமையாகி விட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் மற்றும் ஆபத்துக்கள்…

இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான மக்களிடம் கையில் ஸ்மார்ட் போன் என்பது கட்டாயம் இருக்கிறது. ஆண்ட்ராய்ட், ஆப்பிள் என பல்வேறு வெர்சன்களில் தினம் தினமும் புதிது புதிதாய் வந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட் போன்கள் பலரையும் கவர்ந்து தன் வசம் இழுத்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் தகவல் தொடர்பு சாதனம் என்பதை தாண்டி இன்று பலருக்கும் உயிர்நாடியாக மாறி வருகிறது.

காலைப்பொழுதின் தொடக்கத்தில் இருந்து இரவு உறக்கம் வரும் வரை பெரும்பாலும் இந்த ஸ்மார்ட் போன் கைப்பிடியில் தான் பலரும் தங்களின் நேரத்தை செலவிடுகிறார்கள். ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் தவறு ஏதுமில்லை ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தங்களையும் மீறி இந்த ஸ்மார்ட் போனிற்கு பலரும் அடிமையாகி கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு ஸ்மார்ட் போனிற்கு அடிமை ஆகும் நபர்கள் உடல்நலம் மற்றும் மன நலம் சம்பந்தப்பட்ட பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. வாருங்கள் ஸ்மார்ட் போனிற்கு அடிமை ஆதலின் அறிகுறிகள் என்னென்ன? அவ்வாறு அடிமை ஆவதால் ஏற்படும் சிக்கல்கள் என்னென்ன? என்பதை இப்பொழுது இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.

ஸ்மார்ட் போன் வசம் அடிமை ஆக இருப்பதன் அறிகுறிகள்:
  1. உறங்கும் பொழுதும் தலைக்கு அருகிலோ தலையணைக்கு கீழோ எப்பொழுதும் ஸ்மார்ட்போனை வைத்துக் கொண்டே உறங்குதல்.
  2. அழைப்பு, குறுஞ்செய்தியோ அல்லது நோட்டிபிகேஷன் வந்ததற்கான ரிங்டோன் அல்லது வைப்ரேஷன் எதுவும் வரவில்லை என்றாலும் அவ்வபோது போனை எடுத்து எடுத்து பார்ப்பது.
  3. போனில் சார்ஜ் இல்லை என்றாலோ அல்லது நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லை என்றாலோ தேவையில்லாத பதட்டம் மற்றும் மன இறுக்கத்திற்கு ஆளாகுதல்.
  4. சிறிது நேரம் கையில் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருந்தால் எதையோ இழந்தது போல இருப்பது. வீட்டை விட்டு எப்பொழுது வெளியேறினாலும் போன் இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்வது. ஒருவேளை போன் இல்லாமல் வெளியில் சென்று விட்டால் திரும்பி வரும் வரை ஒருவிதமான அசௌகரியத்துடனே இருப்பது.

இது போன்ற பல அறிகுறிகள் நீங்கள் ஸ்மார்ட் போன் வசம் அடிமையாகி விட்டீர்கள் என்பதற்கு சான்றாக இருக்கின்றன.

இதோ கோடை கொளுத்தும் வெயிலை சமாளிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்…! தினமும் மறக்காம சேர்த்துக்கோங்க!

ஸ்மார்ட் போன் வசம் அடிமை ஆவதால் ஏற்படும் சிக்கல்கள்:
  1. போதுமான திறமைகள் மற்றும் வாய்ப்புகள் இருந்தாலும் தங்களின் நேரத்தை நல்வழியில் செலவிடாமல் மொபைல் போனிலேயே காலத்தை கழிப்பது.
  2. எந்நேரமும் மொபைல் போன் சிந்தனையில் இருப்பவர்களால் வேலை மற்றும் படிப்பில் சிறந்து விளங்குவது என்பது கடினமே.
  3. தொடர்ந்து ஏற்படும் மொபைல் போன் கதிர்வீச்சால் மூளையில் பாதிப்பு ஏற்படலாம்.
  4. கண் பாதிப்பு மற்றும் கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.
  5. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அருகில் இருந்தாலும் அவர்களுடன் செலவிடும் நேரத்தை விட மொபைல் போனில் செலவிடும் நேரம் அதிகமாக இருப்பதால் உறவுகள் இடையே விரிசல்கள் உண்டாகலாம்.
  6. தூக்கம் பாதிக்கப்பட வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளது இதனால் பல்வேறு மனநல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  7. தொடர்ந்து போன் பார்ப்பதால் கண்களை சுற்றி கருவளையம் உண்டாகும்.
  8. சில ஆராய்ச்சி முடிவுகள் மொபைல் போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சால் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி பாதிக்கும் வாய்ப்புகள் உண்டு என்று தெரிவிக்கின்றனர்.

Leave a comment