சமையல் அறையில் உயிர்நாடியாக இருப்பது கேஸ் ஸ்டவ் என்று சொல்லலாம். நம் வீட்டில் உள்ள அனைவரின் பசியை போக்கிட உதவி புரியும் ஒரு சாதனமாக இருக்கிறது. சமையல் ருசியாக இருக்க வேண்டும் என்பதை தாண்டி சமைக்கும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதைவிட முக்கியம் சுகாதாரமானதாக இருக்க வேண்டும். அதற்கு முதல் வேலையாக கேஸ் ஸ்டவ்வை சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
கேஸ் ஸ்டவ் பயன்படுத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்:
சமைக்கும் பொழுது அடுப்பின் மீது உணவுப் பொருட்கள் சிந்தினாலோ அல்லது பால் பொங்கி ஊற்றினாலோ அதை அவ்வபோது சுத்தம் செய்து விடுங்கள். உடனே சுத்தம் செய்யும் பொழுது சுத்தம் செய்வது எளிமையாக இருக்கும்.
ஒரு நாளைக்கு இருமுறை கட்டாயம் ஈரத்துணியால் அடுப்பை முழுமையாக துடைக்க வேண்டும். ஈரத்துணியால் துடைத்து அப்படியே விட்டுவிடக் கூடாது. அதன் பிறகு காய்ந்த துணியால் முழுமையாக துடைத்து விட வேண்டும்.
சூப்பரான குளு குளு இளநீர் பாயாசம் இப்படி செய்து பாருங்கள்..!
15 நாட்களுக்கு ஒரு முறை அடுப்பை முழுமையாக கழற்றி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். (அடுப்பை சுத்தம் செய்ய கழற்றும் பொழுது கேஸ் இணைப்பை சரிபார்த்த பிறகு கழற்ற வேண்டியது மிகவும் அவசியம்.)
ஒரு கப் தண்ணீரில் டிஷ் வாஷரை கலந்து பாத்திரம் விளக்கம் ஸ்கிரப்பால் வட்ட வடிவில் தேய்த்து முழுமையாக கழுவ வேண்டும். அதன் பிறகு ஈரத்துணியால் துடைத்து விடவும்.
அடுப்பின் பர்ணரை அவ்வபோது தனியாக கழற்றி பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். வழக்கமாக எரியும் தீயை விட அடுப்பில் கூடுதலாகவும் குறைவாகவோ தீ எரிந்தால் பர்ணரை உடனடியாக சரி பார்க்கவும்.
இவற்றை எல்லாம் சுழற்சி முறையில் செய்து வந்தால் நிச்சயம் உங்கள் கேஸ் ஸ்டவ் புதிதாக வாங்கியது போல எப்பொழுதும் பளபளப்பாக இருக்கும். இந்த மாதிரி சுத்தம் செய்வது எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்கள் கேஸ் ஸ்டவ் புதிது போல இருக்க உதவும். முயற்சி செய்து பாருங்கள்.