அடிக்கிற வெயிலுக்கு சில மணி நேரங்கள் வெளியில் சென்று வந்தாலே போதும்.. சருமம் நமக்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிடுகிறது. அளவிற்கு அதிகமான சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தால் முகத்தில் உள்ள இயற்கையான பொலிவு மாறிவிடுகிறது. சருமம் கருமை அடைந்து சோர்வடைந்து காணப்படுகிறது. கல்லூரி செல்பவர்கள் அலுவலகம் செல்பவர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் கவலை தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கலாம்.
இனி கவலைப்பட வேண்டாம் வெயிலில் எவ்வளவுதான் அலைந்து திரிந்து வீடு வந்தாலும் உங்கள் சருமத்தை மீண்டும் அதே பொலிவோடு மாற்ற முடியும். இதற்காக விலை ஒரு உயர்ந்த கிரீம்களோ அல்லது சிகிச்சைகளோ அவசியமில்லை. வீட்டில் எளிமையான பொருட்களைக் கொண்டு நாம் நம்முடைய சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ள முடியும். வாருங்கள் அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
1. தக்காளி:
- ஒரு பவுலில் தக்காளி பழத்தை கூழ் போல செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு சுத்தமான துண்டை வெதுவெதுப்பான தண்ணீரில் நனைத்து கொள்ள வேண்டும்.
- தண்ணீரில் நனைத்த துண்டினை இப்பொழுது உங்கள் முகத்தில் அப்படியே வைத்து விட வேண்டும்.
- ஐந்து நிமிடங்களுக்கு பிறகு துண்டை எடுத்து விட்டு நாம் தயார் செய்து வைத்திருக்கும் தக்காளி கூழை முகம் மற்றும் கழுத்து என அனைத்து பகுதிகளும் தடவும்.
- 15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட்டு அதன் பிறகு சுத்தமான தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். அவ்வளவுதான் உங்கள் முகம் பளிச்சென்று மின்னும்.
2. கற்றாழை, மஞ்சள் மற்றும் தேன்:
- ஒரு பவுலில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ள வேண்டும், இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்க்கவும்.
- இவை மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- முகத்தை நன்றாக கழுவிய பிறகு நாம் தயார் செய்து வைத்திருக்கும் கற்றாழை ஜெல்லை தடவி விட வேண்டும்.
- இதனை ஒரு 15 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
- 15 நிமிடங்களுக்குப் பிறகு சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவி துண்டால் ஒற்றி எடுத்தால் சருமம் இயற்கையான பொலிவோடு இருக்கும்.
3. பால் மற்றும் மஞ்சள்:
- ஒரு பவுலின் தேவையான அளவு பால் எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- பிறகு முகம் மற்றும் கழுத்து பகுதியில் இதனை தடவி விட வேண்டும்.
- ஒரு அரை மணி நேரம் அப்படியே வைத்திருந்து அதன் பிறகு வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை கழுவி விடலாம்.
- அவ்வளவுதான் முகத்தில் உள்ள கருமை மறைந்து சருமம் பிரகாசிக்கும்.