அடிக்கிற வெயிலுக்கு சில்லுனு விதவிதமான லஸ்ஸி சட்டுனு இப்படி செஞ்சு சாப்பிடுங்க…!

லஸ்ஸி பலருக்கும் பிடித்தமான ஒரு பானம் ஆகும். வெயிலில் அலைந்து திரிந்து களைப்போடு இருப்பவர்களுக்கு ஏதாவது குளிர்ச்சியாக அருந்த வேண்டும் என்று தோன்றினால் பலரும் இந்த லஸ்ஸியை தான் வாங்கி அருந்துவார்கள். காரணம் இது நம் வயிற்றுக்குள் இறங்கும்பொழுதே குளிர்ச்சியை உணருவோம். அப்படி இந்த வெயிலில் நம்மை ஜில்லென்று வைத்திருக்கும் இந்த லஸ்ஸி விதவிதமாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

லஸ்ஸி:

ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ள வேண்டும் அதில் இரண்டு கப் அளவு தயிர் சேர்த்துக்கொள்ள வேண்டும். தயிருடன் அரைக்கப் அளவு சர்க்கரை சேர்க்கவும். இதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு விருப்பப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து மிக்ஸியில் அடித்து பரிமாறலாம். அவ்வளவுதான் அட்டகாசமான லெஸ்ஸி தயார்.

சூப்பரான குளு குளு இளநீர் பாயாசம் இப்படி செய்து பாருங்கள்..!

புதினா லஸ்ஸி:

ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் அளவு கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கால் கப் அளவு புதினா சேர்த்துக் கொள்ளவும். கால் டீஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்க்கவும். இதனுடன் ருசிக்கு ஏற்ப உப்பு சேர்த்து மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் புத்துணர்ச்சி தரும் புதினா லஸ்ஸி தயார்.

மாம்பழ லஸ்ஸி:

மாம்பழ லஸ்ஸி செய்வதற்கு சிறிதளவு மாம்பழ துண்டுகளை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது இதனுடன் இரண்டு கப் அளவு தயிர் சேர்த்துக் கொள்ளவும். அரை கப் சர்க்கரை சேர்க்கவும். சிறிதளவு ஏலக்காய் தூள் மற்றும் ஐஸ் கட்டிகள் சேர்த்து இதனை மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் அருமையான மாம்பழ லஸ்ஸி தயார்.

Leave a comment