ரவை அப்பம் ஒரு சுவையான சிற்றுண்டி வகையாகும். குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்கும் பொழுது கடைகளில் வாங்கி கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலேயே செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்கள். ஆனால் என்ன செய்வது அதுவும் குழந்தைகளுக்கு பிடித்தமான விதத்தில் எப்படி செய்வது என்ற குழப்பம் இருக்கலாம்.
குழந்தைகளுக்கு பிடித்தமான வகையில் எளிமையாக செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபியை தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். இந்த ரவை அப்பம் செய்வதற்கு அதிகமான பொருட்கள் தேவை இல்லை. மிகக் குறைவான பொருட்களை வைத்து எளிமையாக அதேசமயம் சுவை நிறைந்ததாக செய்துவிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் வாருங்கள் இந்த ரவை அப்பத்தின் ரெசிபியை பார்க்கலாம்.
ரவை அப்பம் செய்வதற்கு முதலில் ஒரு கப் அளவு வெல்லத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இதனை அரை கப் தண்ணீர் விட்டு நன்றாக அடுப்பில் வைத்து கரைத்துக் கொள்ளுங்கள். வெள்ளம் தண்ணீரில் கரைந்தால் போதும். இப்பொழுது ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு வறுக்காத ரவையை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் நாம் காய்ச்சி வைத்திருக்கும் வெல்ல பாகை வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும்.
இந்த ரவையை வெல்லப்பாகில் நன்றாக கரைத்துக் கொள்ளவும் இதனை 10 நிமிடங்கள் மூடி போட்டு அப்படியே வைத்து விடவும். ரவை நன்றாக ஊற வேண்டும் பத்து நிமிடங்களுக்குப் பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் அரை கப் அளவு துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளலாம் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது குறைவாக சேர்த்தால் போதுமானது இப்பொழுது இதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து எடுத்த மாவுடன் கால் கப் அளவு அரிசி மாவு மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை டீஸ்பூன் அளவு ஏலக்காய் தூளும் சேர்த்துக் கொள்ளலாம். நெய் ஒரு டீஸ்பூன் சேர்க்கவும். இதனை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சித்திரை 1 அன்று சுவையான இந்த செட்டிநாட்டு ஸ்பெஷல் உக்கரா செய்து அசத்துங்கள்…!
தண்ணீர் தேவைப்பட்டால் சேர்க்கலாம். அதிக தண்ணீராக இருக்கக் கூடாது. இப்பொழுது கடாயில் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்து நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றி எடுத்தால் சுவையான அப்பம் தயாராகி விட்டது. இதனை மாலை நேரத்தில் சூடாக சாப்பிட அத்தனை அட்டகாசமாக இருக்கும்.