இதோ கோடை கொளுத்தும் வெயிலை சமாளிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்…! தினமும் மறக்காம சேர்த்துக்கோங்க!

கோடை காலத்தின் தொடத்திலேயே வெயில் இத்தனை கடுமையாக உள்ளது. இனி எஞ்சி உள்ள கோடையை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் பலரும் திண்டாடி வருகிறோம். இந்த கோடை வெயிலில் பலருக்கும் பல்வேறு விதமான உடல் உபாதைகள் வருவதற்கு அதிக அளவு வாய்ப்பு இருக்கிறது. அளவுக்கு அதிகமான வெப்பத்தால் உடல் மட்டுமின்றி மனதளவிலும் சோர்வு அடைவதை நாம் உணர்கிறோம்.

செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நீர்ச்சத்து குறைபாடு, சருமம் தொடர்பான பாதிப்புகள் என பலருக்கும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகிறது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இந்த வெயிலால் அதிகம் அவதியுறும் நிலை இருக்கிறது. இந்த பாதிப்புகளை ஓரளவு குறைக்க வேண்டும் என்றால் அது நாம் உட்கொள்ளும் உணவின் மூலமாக மட்டும்தான் முடியும்.

கோடைக்காலத்தில் நாம் உண்ணும் உணவுகள் நம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளாகவும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். அப்பொழுதுதான் உடல் உபாதைகள் சருமப் பிரச்சனைகள் இல்லாமல் எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்க முடியும். இப்பொழுது கோடை காலத்திற்கு உகந்த 10 உணவுப் பொருட்களை நாம் பார்க்கலாம்.

கோடை காலத்திற்கு ஏற்ற உணவுப் பொருட்கள்:

1. இளநீர்:

இளநீர் எளிதாக கிடைக்கக்கூடிய அதே சமயம் அரிய சத்துக்கள் நிறைந்த கோடை காலத்திற்கு ஏற்ற ஒரு உணவு பொருள் ஆகும். இது உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. மேலும் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்துள்ளது. உடலை குளிர்ச்சியாக வைத்திருந்து வெப்பத்திற்கு எதிராக போராடும் ஆற்றலை அளிக்கிறது.

2. சிட்ரஸ் நிறைந்த பழங்கள்:

எலுமிச்சை, ஆரஞ்சு, அன்னாசி போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களை அன்றாடம் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்து இருக்கிறது. இந்த வைட்டமின் சி யானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

3. வெள்ளரிக்காய் :

வெள்ளரிக்காயில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது எனவே கோடை காலத்தில் மலச்சிக்கல் தொந்தரவு இல்லாமல் இருக்க அதிக அளவு வெள்ளரிக்காய் எடுத்துக்கொள்ளுதல் நல்லது. மேலும் இதில் நீர்ச்சத்தும் நிறைந்து இருப்பதால் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகிறது.

4. தர்பூசணி:

கோடை காலம் வந்து விட்டாலே பலருக்கும் தர்பூசணி நினைவு வந்துவிடும் காரணம் தர்பூசணி சீசன் அப்பொழுதுதான் தொடங்கும். இந்த தர்பூசணி பழத்தில் தொண்ணூறு சதவீதத்திற்கும் மேல் தண்ணீர் நிறைந்து இருக்கிறது எனவே இந்த தர்பூசணி அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் இது ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்ததாகவும் இருக்கிறது. உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் தன்மை இந்த தர்பூசணிக்கு உண்டு.

5. வெங்காயம்:

வெங்காயமும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவக்கூடிய ஒரு உணவு பொருளாகும். வெங்காயத்தை அதிகம் எடுத்துக் கொள்வதால் வெயிலினால் ஏற்படும் ஸ்ட்ரோக் ஏற்படாத வண்ணம் காக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வெங்காயம் நோய் தொற்றுக்கு எதிராக போராடும் ஆற்றலும் உடையதாக உள்ளது.

6. தயிர்:

தயிரும் உடலை குளிர்ச்சியாக்கக்கூடிய உணவுப் பொருளாகும். தினமும் 100 கிராம் அளவு தயிரை எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். தயிர் சாதம், ரைத்தா, அல்லது லெஸ்ஸி என ஏதாவது ஒரு வகையில் தயிரை எடுத்துக் கொள்ளுங்கள்.

7. வாழைப்பழம்:

இந்த வெப்ப காலத்தில் உடல குளிர்ச்சியாக வைக்கவும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை சமாளிக்கவும் வாழைப்பழம் உதவுகிறது. மேலும் வாழைப்பழம் நார்ச்சத்து நிறைந்ததாகவும் இருக்கிறது. வாழைப்பழம் செரிமானத்திற்கு உகந்த உணவாகவும் கருதப்படுகிறது.

8. கீரை வகைகள்:

கீரை வகைகள் உடலுக்கு தேவையான நார்ச்சத்தை வழங்க கூடியன. மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. எனவே அதிக அளவு கீரை வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

9. புதினா :

புதினாவில் ஃபோலேட், அயன், மேங்கனிஸ், வைட்டமின் ஏ ஆகியன நிறைந்து இருக்கிறது. புதினா அனைத்து வகையான உணவு வகைகளிலும் சேர்க்கக்கூடிய ஒன்றாகும். புதினா சேர்ப்பதால் உணவு மணமாக இருப்பது மட்டுமின்றி புத்துணர்ச்சியாகவும் இருக்கும். சட்னி வகைகளில் மட்டும் இல்லாமல் பானங்களிலும் இந்த புதினாவை சேர்த்துக் கொள்ளலாம்.

10. மீன் :

கோடை காலத்தில் பெரும்பாலும் சிக்கன், இறைச்சி போன்றவற்றை குறைத்துக் கொள்ளுதல் நல்லது. அதற்கு பதிலாக அசைவ உணவு பிரியர்கள் மீனை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். மீன் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதாக இருக்கிறது. எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. குறைந்த அளவிலான கொழுப்புக்கள் மட்டுமே உடையது.

மேலே குறிப்பிட்ட இந்த 10 உணவு பொருட்கள் அன்றாடம் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் சோர்வடைய விடாமல் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.

Leave a comment