இது தெரியுமா உங்களுக்கு? சருமத்திற்கு மிகவும் முக்கியமான சன் ஸ்கிரீன் பற்றிய சில தகவல்கள் மற்றும் பயன்பாடு…!

சரும பராமரிப்பு படிநிலைகளின் மிக முக்கியமாக கருதப்படுவது சன் ஸ்கிரீன். சன் ஸ்கிரீன் சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க உதவி புரிகிறது. இந்த சன் ஸ்கிரீன் அணிவதால் சூரிய ஒளியால் சருமத்தில் கருமை படிவது, சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளை தவிர்க்க உதவுகிறது. முக்கியமாக சூரியனில் இருந்து வெளிப்படும் புற ஊதா கதிர்களால் சருமத்தில் புற்றுநோய் ஏற்படாத வண்ணம் காத்திடவும் இந்த சன் ஸ்கிரீன் உதவுகிறது.

ஒரு சிலர் இந்தியர்களின் சருமத்தில் இயற்கையாகவே மெலனின் அதிகம் உள்ளது எனவே அவர்களுக்கு சன் ஸ்கிரீன் என்பது அவசியம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் பல சரும நிபுணர்கள் வெளியில் செல்லும் பொழுது சன் ஸ்கிரீன் அணிந்து செல்வதையே பரிந்துரைக்கிறார்கள். தினமும் முகத்தை கழுவிய பிறகு அதனை நீரேற்றத்துடன் வைத்திருக்க மாய்ஸ்சுரைசர் மற்றும் சன் ஸ்கிரீன் அணிந்து கொள்வதும் மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த சன் ஸ்கிரீனை பயன்படுத்தும் நீங்கள் சன் ஸ்கிரீனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

இதோ கோடை கொளுத்தும் வெயிலை சமாளிக்க கட்டாயம் சாப்பிட வேண்டிய 10 உணவுகள்…! தினமும் மறக்காம சேர்த்துக்கோங்க!

சன் ஸ்கிரீன் பற்றிய சில அரிய தகவல்கள்:
  1. நீங்கள் வாங்கும் சன் ஸ்கிரீன் எப்பொழுதும் பிராட் ஸ்பெக்ட்ரம் உள்ளதாக இருக்க வேண்டும். பிராட் ஸ்பெக்ட்ரம் இருக்கும் சன் ஸ்கிரீன் மட்டும் தான் UVA மற்றும் UVB போன்ற ஆபத்தான கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தை பாதுகாத்திட உதவும்.
  2. சன் ஸ்கிரீன் SPF என்று குறிப்பிடப்பட்டுள்ள சூரிய பாதுகாப்பு காரணி குறைந்தது 30 இருக்கும் படி பார்த்து வாங்குங்கள். முப்பதை விட குறைவாக இருந்தால் அந்த சன் ஸ்கிரீன் வாங்க வேண்டாம். ஏனெனில் குறைந்தபட்சம் SPF 30 இருந்தால் மட்டும்தான் ஆபத்தான புற ஊதா கதிர்களில் இருந்து 97 சதவீதம் பாதுகாக்க முடியும்.
  3. எந்த ஒரு சன் ஸ்கிரீனும் வாட்டர் ப்ரூப் ஆகவோ அல்லது வியர்வையை தாங்கும் சக்தியுடன் இருப்பது இல்லை. எனவே சன் ஸ்கிரீன் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை மீண்டும் தடவி கொள்ளுதல் நல்லது.
  4. பிறந்து ஆறு மாதத்திற்கும் குறைவாக உள்ள குழந்தைக்கு சன் ஸ்கிரீன் பயன்படுத்தக் கூடாது. ஆறு மாதத்திற்கும் குறைவாக உள்ள குழந்தைகளை கூடுமானவரை நிழலில் வைத்து பாதுகாப்பது சிறந்தது.
  5. சன் ஸ்கிரீன் வெயில் காலத்தில் வெளியில் செல்லும் பொழுது மட்டும் அணிந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. அனைத்து பருவ நிலைகளிலும் அணிந்து கொள்ளலாம்.
சன் ஸ்கிரீன் பயன்படுத்தும் பொழுது இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளுங்கள்:
  1. வெளியில் செல்வதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக சன் ஸ்கிரீன் அணிந்து கொள்ள வேண்டும்.
  2. சன் ஸ்கிரீன் பாட்டில் வடிவத்தில் இருந்தால் பயன்படுத்துவதற்கு முன்பு நன்றாக பாட்டிலை குலுக்கிய பிறகு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
  3. ஒரு முறைக்கு குறைந்தது இரண்டு மேசை கரண்டி அளவிற்காவது சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். இரண்டு விரல்களில் நிறைய எடுத்து பயன்படுத்தினால் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு இருக்கும்.
  4. முகத்திற்கு மட்டுமில்லாமல் கழுத்துப் பகுதி காதுகளில் பின்புறம் கைப்பகுதி முழங்கை ஆக்கிய அனைத்து பகுதிகளிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் சூரிய ஒளியில் படும் அனைத்து பாகங்களிலும் சன் ஸ்கிரீன் தடவுங்கள்.
  5. சன் ஸ்கிரீன் அணிந்து வெளியே சென்ற பிறகு ஏதேனும் விளையாட்டில் ஈடுபட்டு அதிகமாக வியர்த்தல் அல்லது நீச்சல் போன்ற காரியங்களில் ஈடுபட்டால் மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஒரு டேபிள் ஸ்பூன் அளவு சன் ஸ்கிரீன் அணிந்து கொள்ளுங்கள்.

Leave a comment